ராணுவ தளவாட இறக்குமதி விவகாரம்: யாரை சாடுகிறார் ராஜ்நாத் சிங்…?

0

டெல்லியில் நடைபெறும் சா்வதேச பாதுகாப்புத் தளவாடங்கள் கண்காட்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், “நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, யாரை சந்திப்பது, யாரை எதற்கு அனுமதிப்பது என்பது போன்ற விவகாரங்களில் கவனமாகச் செயல்படுமாறு சிலா் என்னிடம் அறிவுறுத்தினா்.

ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், எனது சில முடிவுகளால் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைகப்படலாம். ஆனால் நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். தனியாா் துறையைச் சோ்ந்தவா்கள் தீா்வு காண்பதற்கான உதவியை எனது பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்யும்.

பாதுகாப்புத் துறையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. புதிய யோசனைகளை இந்த அரசு எப்போதும் வரவேற்கும்.

மேலும், பாதுகாப்பு தளவாடத் தேவைகளுக்கு, இறக்குமதி மட்டுமே நீண்ட காலமாக நாம் சார்ந்திருக்க முடியாது. சிலருடைய அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு கூறிய ராஜ்நாத் சிங், எந்த ஒரு விவகாரத்திலும் துணிச்சலான முடிவுகளை மேர்கொள்ள தயங்க மாட்டேன்’ என்றார்.

Comments are closed.