“எனக்கு காவி நிறம் பூச நினைக்கிறார்கள்: நான் அதில் சிக்க மாட்டேன்”- ரஜினி

0

அதிகார்வபூர்வமாக அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி, எப்போது வருவேன் என்று அறிவிக்கவில்லை.

இதனிடையில் அவருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும், தமிழக பாஜக கட்சி தலைவர் பொருப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வந்தன.

பின்னர், பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் பாஜக எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும் திருவள்ளுவருக்கு காவி பூச முயற்சிப்பது போல் எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் அதில் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என்ற தெரிவித்துள்ளார்.

Leave A Reply