பான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்

0

கொரோனா பரவல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் 25 முதல் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்தது.

பின்னர் அத்தடையை, மே 6-ஆம் தேதி அவசர அவசரமாக விலக்கிக்கொண்டு, புகையிலை அல்லது நிகோடின் இல்லாத பான் மசாலாவை விற்பனை செய்யலாம் என்று அனுமதியும் வழங்கியது.

பான் மசாலா, குட்கா போன்றவை போதை தருவது மட்டுமல்ல, அதனை மெல்லும்பவர்களை பொது இடங்களில் எச்சிலை துப்ப வைக்கிறது. அதனால் கொரோனா பரவுல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் அரசு முன்பு தடை விதித்தது. ஆனால் தற்போது நிகோடின் இல்லாத குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்யலாம் என்றால், அதனை மெல்லுபவர்கள் எச்சிலை துப்ப மாட்டார்களா? அதனால் கொரோனா பரவாதா? என்று கேள்விகள் எழுந்தன.

இதுதொடர்பாக, லக்னோவை சேர்ந்த பத்திரிகையாளர் சஞ்சய் சர்மா, எது போன்ற பான் மசாலாவை விற்கக்கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பான் மசாலா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘ரஜ்னிகந்தா’ தரம்பால் சத்யபால் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், பான் மசாலாவுக்கு தடை விதிக்க வேண்டியதில்லை என்றும் இந்த கொரோனா பரவல் சமயத்தில் அதன் பொறுப்புகள் பற்றி தங்கள் நிறுவனம் அறிந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரூ.10 கோடியும், கொரோனாவுக்கு எதிரான சேவைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு ரூ.10 கோடி ரூபாயும் வழங்கியுள்ளோம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் ஜூலை 8 அன்று விசாரணைக்கு வருகிறது.

Comments are closed.