ரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை -மார்கண்டே கட்ஜூ

0

மத்திய பாஜக அரசு வழங்கிய நாடாளுமன்ற எம்.பி பதவியை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனது நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை. பாலியல் வழக்கில் சிக்கிய ரஞ்சன் கோகோயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமானவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு போகவுள்ளார்” என நீதிபதி மார்கண்டே கட்ஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மேலு, ஓய்வுபெற்ற நீதிபதியான குரியன் ஜோசப், “ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை நியமனத்தை ஏற்றுக்கொள்வது நிச்சயமாக நீதித்துறையின் சுதந்திரத்தில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

http://www.puthiyavidial.com/india-mp-bjp-supreme-court_88090/

முன்னதாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்குரும், ரஞ்சன் கோகோய் நியமனம் குறித்து கூறியதாவது, “இது ஏற்கெனவே எதிா்பாா்த்ததுதான். அதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், இவ்வளவு விரைவில் நியமிக்கப்பட்டுள்ளதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்தன்மை, சாா்பில்லாத்தன்மை உள்ளிட்டவற்றை மறுவரையறை செய்வதுபோல் உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகோய்-க்கு மாநிலங்களவை எம்.பி பதவி அளிக்கும் மத்திய பாஜக  அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள், வழக்கறிஞர்கள் உட்பட மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.