சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்

0

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்றதற்கு, பாஜக போன்ற இந்துத்துவ கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் சங்கபரிவார் அமைப்புகள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் இன்று காலை 10:30 மணியளிவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு 7 நீதிபதிகள்  கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.