உத்தர பிரதேசம்: பாஜக எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினர் மீது பாலியல் வழக்கு

0

பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் கணவர் 2007ல் இறந்துவிட்டார். அதன் பிறகு பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி மருமகன் பெண்ணை திருமண செய்துக்கொள்வதாக கூறியுள்ளார். கடந்த 2017 உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது எம்.எல்.ஏவின் மருமகன் ஒரு மாதத்திற்கு பெண்ணை ஹோட்டலில் அடைத்துவைத்து குடும்பத்துடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராம்பதான் சிங் தெரிவித்துள்ளார்.

இதனயடுத்து படேஹி காவல் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக மோடி, தங்கள் ஆட்சிதான் பெண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்குகிறது என்று தெரிவித்து வருகிறார்.  ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக கட்சியினரே பாலியல் குற்ற வழக்குகளில் பெயர்பெற்றவர்களாக இருப்பதே மோடி அரசின் சாதனை என தெரிகிறது.

Comments are closed.