“ரேப் இன் இந்தியா” மோடியை கேலி செய்த ராகுல் காந்தி: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது!

0

ஜார்க்கண்ட்  மாநிலத்தின் கொட்டா பகுதியில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல், “நரேந்திர மோடியின் “(மேக் இன் இந்தியாவை, ”ரேப் இன் இந்தியா)” என கேலி செய்தார்”.

“உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அந்த பெண்ணுக்கு விபத்தும் ஏற்பட்டது. அந்த விபத்திற்கு  குற்றவாளியும் எம்.எல்.ஏ தான் காரணம் என்ற சந்தேகமும் பலரிடம் உள்ளது. ஆனால், மோடி இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து வாய்த்திறக்காமல் இருந்து வருகிறார். மேலும், நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி விமர்சித்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பாஜக பெண் எம்.பிக்கள் பலர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள பெண்களை ராகுல் அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை  ஒத்திவைக்கப்பட்டது.

“ரேப் இன் இந்தியா” என நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை. டெல்லியை பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் என மோடி விமர்சித்த காட்சி என்னிடம் உள்ளது. அதை அனைவரும் பார்க்கும் விதமாக எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட உள்ளேன். அஸ்ஸாமில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசைத்திருப்பவே பாஜக வேண்டுமென்று திட்டமிட்டு நான் கூறியதை பெரிய பிரச்சனையாக ஏற்படுத்தி நாடகமாடி வருகிறது” என்றார் ராகுல் காந்தி.

Comments are closed.