பாஜக ஆட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூடல்

0

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வங்கி கிளைகள் மூடப்பட்டுன என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய ரிசர்வ் வங்கி, “இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடிப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட மொத்த வங்கி கிளைகளில் 75 சதவிகித வங்கி கிளைகள்,  இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளது.

2017-18ம் ஆண்டில் 2 ஆயிரத்து 83 கிளைகள் என்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 5 வருடங்களில் 3 ஆயிரத்து 400 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.