பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா

0

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியாகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அகில பாரத இந்து மகா சபையின் தேசிய தலைவர் சாமியார் சக்ரபாணி பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “பாபர் மஸ்ஜிதை இடித்ததற்காக போடப்பட்ட கிரிமினல் வழக்குகள் என்பது, ராமரை வழிபடுபவர்கள் மீதானது. அவர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை திரும்பப்பெற்று, இந்த விவகாரத்தை முடிவுக்குகொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1992இல் இறந்த கரசேவகர்கள் (குண்டர்கள்) மட்டுமல்லாமல், கரசேவையை செய்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு மற்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும் தியாகி என்கிற அந்தஸ்தை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவதற்காக அங்கிருந்த பாபர் மசூதியை இடித்தது சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டது. பாபர் மஸ்ஜிதை இடித்த, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தாதது ஏன் என தீர்ப்பு குறித்து சில கேள்விகள் எழுந்தது.

மேலும், பாபர் மஸ்ஜிதை இடித்தது சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அந்த இடத்தை மீண்டும் இஸ்லாமியர்களுக்கே ஒதுக்குவதுதானே நியாயமாக இருக்கும் எனவும் தீர்ப்பு குறித்த கேள்விகள் எழுந்தது.

Comments are closed.