TRP மோசடி வழக்கு: ரிபப்ளிக் டிவி பணியாளர்கள் 12 போ் கைது

0

TRP மோசடியில் ஈடுபட்ட ரிபப்ளிக் டிவியின் உதவி துணைத் தலைவா் கன்ஷியாம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

TRP குறியீட்டை போலியாக அதிகரித்துக காட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி நிறுவனத்தின் உதவி துணைத் தலைவா் கன்ஷியாம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவா் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு விநியோக பிரிவின் தலைவராகவும் உள்ளாா்.

இந்த வழக்கில் இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கன்ஷியாம் சிங்கிடம் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கெனவே பல முறை விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

Comments are closed.