பெண் போலிஸை தாக்கிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீண்டும் கைதாக வாய்ப்பு

0

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம், ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி என்று பெயரைக் குறிப்பிட்டும் உள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியது.

அப்போது அர்னாபை கைது செய்ய அலிபக் காவல்நிலைய போலிஸ் குழு சென்ற போது அர்னாப் கோஸ்வாமி ஒரு பெண் போலிஸை அதிகாரியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து மும்பையின் என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி மீது பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதை தடுத்து தாக்குதல்), 504 (அமைதி சீர்குலைத்து வேண்டுமென்றே அவமதிப்பது) மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்ட நிலையில், பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் அவரைக் கைது செய்ய மும்பை காவக்துறை தயாராகி வருவதாக தெரிகிறது.

Comments are closed.