தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது

0

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை காவல்துறை கைது செய்துள்ளனர்.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட வழக்கை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் காவல்துறை மீண்டும் விசாரணையை தொடங்கியது.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை அர்னாப் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.