CAA சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல் பஞ்சாப் மாநிலமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2-ம் நாளான இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

“சுதந்திரமான, நியாயமான ஜனநாயகத்தில் இச்சட்டத்தை அனைவருமே எதிர்க்கிறார்கள். இந்தச் சட்டம் பிரிவினையை ஏற்படுத்துகிறது. மதரீதியாக பிளவுபடுத்தி குடியுரிமையை வழங்குகிறது. நம் தேசத்தில் சில பிரிவு மக்களின் கலாச்சார அடையாளம், மொழி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்குடியுரிமைத் திருத்தச் சட்டம் இருக்கிறது. சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அகதிகளைகக் கூட மதரீதியாக இந்தச் சட்டம் பிளவுபடுத்துகிறது. இந்தியாவின் அடையாளமான மதச்சார்பின்மையை மீறுகிறது. ஆதலால், மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் மதரீதியாக வேறுபாடு காட்டக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக” சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் பிரம் மொஹிந்திரா தெரிவித்தார்.

மேலும், இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்தபின் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.