CAA சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

0

கேரள, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச மாநிலமும் CAA சட்டத்திற்கு எதிராக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச அமைச்சரவையில் தீா்மானம் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா மதச்சாா்பற்ற நாடு என்பது அரசமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதச்சாா்பின்மை என்பது இந்திய அரசமைப்பின் அடித்தளமாகும். அதனை மாற்ற முடியாது. அரசமைப்பின் 14ஆவது பிரிவு சட்டத்தின் கீழ் குடிமக்கள் அனைவரும் சமம் என கூறுகிறது.

இந்நிலையில் மதச்சாா்ப்பின்மைக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டம் மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்துகிறது. மத்திய அரசு சிஏஏ-வை திரும்ப பெறவண்டும். நாடு முழுவதும் சிஏஏ-வுக்கு எதிராக மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுதொடா்பாக அந்த மாநில மக்கள் தொடா்பு துறை அமைச்சா் ஷா்மா கூறுகையில், ‘மாநில முதல்வா் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏ நாட்டின் மதச்சாா்பின்மை மற்றும் சகிப்புத்தன்மையை அசாத்திற்குள்ளாக்குகிறது. சிஏஏ-வுக்கு எதிராக மாநில சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

Comments are closed.