கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது

0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலைச் சேர்ந்த கோபாலன் என்ற 65 வயது முதியவர் வசித்து வந்தார். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்.

இந்த நிலையில், கோபாலன் கடந்த திங்கள் இரவு மர்ம நபரால் குத்திக்கொல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு கொலை குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்தனர்.

கைதான சரவணன் பாஜக கட்சியின் நாச்சியார் கோவில் நகர தலைவர். இவர் கோபாலன் பொறுப்பு வகிக்கும் நாச்சியார்கோவில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் தையல் கடை நடத்தி வந்ததாகவும், அதற்கு வாடகை தராததால் இருவருக்கும் தகராறு இருந்துள்ளது.

இதனால் தையல் கடையை நீதிமன்றம் மூலம் கோபாலன் அகற்றிவிட்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சரவணன் மது குடித்துவிட்டு கோபாலன் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். பின்னர் காவல்துறையின் நடவடிக்கையால் கொலையாளியான நாச்சியார் கோவில் பாஜக நகர தலைவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

Comments are closed.