மசூதிகளை இடித்து காவிக் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ்: செங்கோட்டையில் விவசாய கொடியேற்றத்திற்கு கண்டனம்

0

டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார்  விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது விவசாய கொடியை ஏற்றினர்.

விவசாயிகள் பேரணி வன்முறையானதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது. வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. டெல்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரமான அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். ஜனநாயக முறையில் நடத்தப்படும் போராட்டங்களில் ஊருவல், கலவரம், வன்முறை வெறியாட்டம் போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு பயங்கரவாத அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அதன் கீழ்தான் பாஜக எனும் பாசிச கட்சி மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது.

இந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்புதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில் நடக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இந்த அமைப்புதான் காரணம். இந்த இயக்கத்தில் பயங்கரவாதிகள், பொது இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் போட்டு மதக்கலவரம் ஏற்படுத்த துடிப்பவர்கள். நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான கலவரங்களை தூண்டி லட்சக்கணக்கான மக்களை கொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ். பாபர் மஸ்ஜிதை இடித்து ஆர்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி கோவில் கட்ட நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் இந்த பயங்கரவாத அமைப்புதான், அடுத்து காசி, மதுராவின் உள்ள பள்ளிவாசல்களையும் இடித்துவிட்டு கோவில் கட்டுவோம் என பகிரங்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.