பாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்

0

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பணி செய்யும் டிஜிட்டல் நிறுவனமான ‘சோசியல் சென்ட்ரல்’ நிறுவனத்தின் உரிமையாளர் தேவாங் டேவ்.

இவர் மத்திய பாஜக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகவலைதளத்தை நிர்வாகிக்கும் தேசிய நிர்வாகியாகவும் உள்ளார். பாஜகவின் சார்பிலான, “அச்சமற்ற இந்தியர்” (Fearless Indian), “நான் நரேந்திர மோடியைஆதரிக்கிறேன்” (I Support Narendra Modi) எனும் இரண்டு இணையதளங்களையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியான தேவாங் டேவ்-தான் இவ்வளவு காலமும் மகாராஷ்டிரா தேர்தல் ஆணையத்தின் சமூக வலைதள பக்கங்களையும் நிர்வகித்து வந்தார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இதன் ஆதாரங்களை மனித உரிமை செயற்பாட்டாளர் சாஹேத் கோகலே வெளியிட்டுள்ள நிலையில், அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் நடைபெறவிருந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக, திடீரென மாநில தேர்தல் ஆணையர் அஸ்வினி குமாரை நீக்கிவிட்டு பல்தேவ் சிங்கை, பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நியமித்தது. அந்த பல்தேவ் சிங்-தான், தேவாங் டேவை, மகாராஷ்டிர தேர்தல் ஆணையத்தின் சமூகவலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பணியில் நியமித்திருக்கிறார். தேர்தலின் போது சமுக வலைதளங்களில் கட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கண்காணிக்கும் முக்கிய பொறுப்பை தேவாங்டேவிற்கு வழங்கியுள்ளார்.

இதனை அம்பலப்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர் சாஹேத் கோகலே, கூடவே தேவாங்டேவின் மதத்துவேச பதிவுகளையும், பொய்ச் செய்திகளையும் எடுத்துக்காட்டினார்.

இதனால் ஆத்திமடைந்த பாஜகவினர், மனித உரிமை செயற்பாட்டாளர் சாஹேத்திற்கு மிரட்டல் விடுக்க துவங்கியுள்ளனர். ‘ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த பலர் தன் வீட்டின் முன் கூடி ஜெய் ஸ்ரீராம் என கோஷங்கள் எழுப்புவதாகவும், பெற்றோரை மிரட்டுவதாகவும்’ சாஹேத் கோகலே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.