சோதனை சாவடிகளை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதியில்லை: அதிகாரி விளக்கம்

0

ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கையில் லத்திகளை வைத்துக் கொண்டு பயணிகளை பரிசோனை செய்வது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பட்டன. மேலும்  தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்கள் ஏப்ரல் 9 முதல் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சோதனைச் சாவடிகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவி தேவையில்லை என்றும் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.

அழைக்கா விருந்தாளியாக வந்தவர்கள், வழக்கம் போல ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நாட்டிற்காக உழைப்பது போன்ற கலாச்சார பொய்யை பரப்பி வருகின்றனர்.

அலெய்ர் சோதனைச் சாவடியில் மாநில காவல்துறைக்கு உதவுது போன்று பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தியது. அதாவது சோதனை சாவடியில் தங்களுக்கு உதவ முடியுமா என்று அலெய்ரில் உள்ள உள்ளூர் காவல்துறை கேட்தாக ஆர்.எஸ்.எஸ். மாநில ஊடக பொறுப்பாளர் ஆயுஷ் நாடிம்பள்ளி ஒரு கட்டுக்கதையை கூறியுள்ளார்.

இதற்கிடையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்றை ஆர்.எஸ்.எஸ். கையிலெடுப்பது சட்டத்திற்கு முரணாது என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கமிஷனரின் அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு சோதனைச் சாவடியைக் காப்பாற்ற முடியும் என்று மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜெட் உல்லா கான் கேள்வி எழுப்பியுள்ளார். “உள்ளூர் காவல்துறை அவர்களுக்கு அனுமதி அளித்தது, அதே நேரத்தில் கமிஷனர் அப்படி எதுவும் இல்லை என்று கூறுகிறார். நாங்கள் யாரை நம்புவது? ” என்றார் கான்.

Comments are closed.