டெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள்ளினர்!

0

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ கும்பல்களில் இந்த தாக்குதல்களால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டடுள்ளதோடு பல பகுதியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளாது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் காவல் துறையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் நால்வர் இறந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வன்முறையில் தாக்கப்பட்ட சர்ஃபரஸ் என்பவர் கூறுகையில், “எனது கர்ப்பிணி மனைவியை இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது கும்பல்கள் என்னை என்னைத்தடுத்து நிறுத்தி தாக்கினர். அவர்கள் என் பெயரை கேட்டார்கள். என் கால் சட்டையை கழற்ற சொன்னார்கள். என் பெயர் சர்ஃபராஸ் என்று கூறினேன். பெயர் சொன்னவுடன் கம்பிகளால் என்னைத் தாக்கியத்துடன், என்னை நெருப்பின் மீது தள்ளினார்கள்,” என்றார் சர்ஃபரஸ்.

இதுகுறித்து போராட்டக்காரர்களில் ஒருவர் கூறியதாவது, “நாங்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்தோம்.  வன்முறையை விரும்பவில்லை. திங்களன்று (நேற்று) நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.  அரசமைப்பு முறையில் அமைதியாக போராடுவோம். இந்த அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி கொடுக்க வேண்டும்,” என போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.

ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்பவரும் வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் கூறுகையில், ”ஆட்டோ ஓட்டுநராக இருந்துவந்த என் சகோதரர், இந்த வன்முறையால் சம்பவத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

பாஜக கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா தலைமையில் CAAக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. அப்போது பாஜகவினர் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்கரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதுவே வன்முறை வெறியாட்டத்திற்கு காரணம் என வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.