இந்து முன்னணி நிர்வாகி கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

0

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகியாகவும் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளராகவும் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர் ஜீவானந்தத்தின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து ஜீவானந்தம், நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வதாகவும், தனது குடும்பத்தினரை கொலை மிரட்டுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை இல்லாத நிலையில் அதிருப்தி அடையந்த ஜீவானந்தம் இன்று  (வெள்ளியன்று ) தனது குடுத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துககொள்ள முயன்றார்.

இதையெடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி  தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments are closed.