உ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்

0

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் விஷ்வ இந்து சேனாவை சேர்ந்த கும்பல் ஒன்று நேபாள நாட்டை சேர்ந்த நபரை வழி மறித்து அவரது தலையை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லியும், நேபாள பிரதமருக்கு எதிராக முழக்கமிடவும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் அந்த இந்துத்துவ கும்பல் பதிவேற்றியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பும், சர்ச்சையும் உருவாகியுள்ளது. மேலும் இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் பெரிய சிக்கல் ஏற்பட இந்த சம்பவம் உருவெடுத்துள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வாரணாசி காவல்துறை அந்த கும்பலை கைது செய்துள்ளதாக கூறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, “ராமரின் பிறப்பிடமான அயோத்தி இந்தியாவில் இல்லை நேபாளத்தில் தான் உள்ளது. ராமர் இந்தியர் அல்ல, நேபாளி” என பேசியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.