கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை

0

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் 8 வருடங்களுக்கு கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர்களுக்குக் கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஜெகன் கொல்லத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவருடைய உறவினரும் தாக்கப்பட்டார். உடம்பில் பல காயங்கள் ஏற்பட்ட ஜெகன் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த வினோத், கோபக்குமார், சுப்பிரமணியன், பிரியராஜ், பிரணவ், அருண், ரஜனீஷ், தினராஜ் மற்றும் ஷிஜு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொல்லம் கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

ஆனால் குற்றவாளிகல் அனைவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பின்னர் இவ்வழக்கு கொல்லம் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட நிகையில் தற்போது மீண்டும் ஆயுள் தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனையுடன் 9 பேருக்கும் ரூபாய் 71,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.