இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்

0

இந்தியாவில் சாதிய அடிப்படையில் இந்துக்களை நசுக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துவதாக முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கோல்ஸே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் தங்களை உயர்வானவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் சாவர்க்கர் மற்றும் கோல்வர்கர். இந்தியாவின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட சமத்துவத்தை இவர்கள் ஏற்கவில்லை. இன்னும் இவர்களது வழியே நடைமுறையில் உள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்துத்துவாவினரை எதிர்கொள்ள வேண்டுமென்றால் முஸ்லிம்கள், தலித்துகள் போன்று மற்றவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் கோல்ஸே பாட்டில் தெரிவித்தார்.

Comments are closed.