கேரள மாநில கண்ணூரில் குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது!

0

கேரளா, கண்ணூரிலுள்ள பொன்னியம் நயனார் சாலையில் கடந்த வாரம் சாலை மறியல் நடந்தது. அப்போது வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தீவிரவாதி தலைமறைவாகிவிட்டார். பின்னர் சி.சி.டி.வி காட்சிகளால் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் அவனை கைது செய்தனர். வெடிகுண்டு வீசிய அந்த தீவிரவாதி கோவையை சேர்ந்த கே.பிரபேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி நிஜீஷ் கூறுகையில், “வெடிகுண்டு வீசிய பிரபேஷ், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேந்தவர். ஜனவரி 16ஆம் தேதி அதிகாலையில் அவர் வெடிகுண்டு வீசினார். குண்டு வீசப்பட்டதால் பணியில் இருந்த இரண்டு போலீசார் அதிஷ்டமாக உயிர் தப்பினர்.  பிரபேஷ் பல வன்முறை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்” என கூறினார்.

Comments are closed.