CAA போராட்டக்காரர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த வாய்ப்பு- அசாதுதின் ஒவைஸி

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலிய பல்கலை கழக அருகிலுள்ள ஷாகின் பாக் பகுதியில் இடைவிடாமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் CAA-NRC-NPR போன்ற பாசிச பாஜக அரசின் சட்டங்களை எதிர்த்து வலுவான பேராட்டத்தை நடத்தி வருவதால் நாடு முழுவதும் பெரும் கவத்தை ஈர்த்துள்ளது.

இந்த போராடத்தில், போராட்டக்காரர்கள் போல  பெண் ஒருவர் ஊடுருவியுள்ளார். பின்னர் அருகிருந்தவர்கள் சந்தேகத்துடன் அவரை பிடித்து விசாரித்ததில், அந்த பெண் பாசிச பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவித்தது. இதனையடுத்து காவல்துறை அவரை கைது செய்தது.

கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினான். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு அதே போரட்டாத்தில் மற்றோரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி துப்பாக்கியுடன் சென்று போராட்டக்காரர்களை மிரட்டியுள்ளான். போராட்டக்காரர்கள் அவரைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஐதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, “டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்த வாய்ப்புள்ளது. ஷாஹீன் பாக் பகுதி ஜாலியன் வாலாபாக் பகுதியாகக் கூட மாறலாம். இந்த சுப்பாக்கிச்சூ சம்பவத்திற்கு காரணம், போராட்டக்காரர்களை சுடவேண்டும் என பா.ஜ.க அமைச்சர் பேசியதுதான்” என தெரிவித்தார்.

Comments are closed.