மகாராஷ்டிரா ஆட்சி யாருக்கு? தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ்

0

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்திதுள்ளார்.

பாஜக – சிவசேனா கூட்டணிக்கிடையே குழப்பம் காரணமாக, பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், நாக்புரியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு இரவு 9.25 மணியளவில் வந்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடா்பாக ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Comments are closed.