பாஜகவினரை தப்பவைக்க முஸ்லிம்கள் மீது கொலை பழி சுமத்திய உ.பி அரசு..!

0

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அக்டோபர் 18ஆம் தேதி இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டார்.

இதில் முதலாவதாக, அஷ்பக் ஷேக், மொய்னுதீன் பதான் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் மௌலானா, ஃபைஜான், ரஷீத் பதான் ஆகிய மூன்று பேரையும் உ.பி மற்றும் குஜராத் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், “கடந்த சில காலமாக கமலேஷ் திவாரி, முஹம்மது நபிக்கு எதிராக பேசியதற்காக இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டுருக்கலாம்” என தெரிவித்தனர்.

ஆனால் கொலை செய்யப்பட்ட கமலேஷ் திவாரியின் தாயார் ஊடகங்களிடம் கண்ணீருடன் கூறியதாவது: “என் மகன் கொலையில் பாஜக-வினருக்கு தொடர்பு உள்ளது. ஷிவ் குமார் குப்தா ஒரு மாஃபியா, அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இருவருக்கும் கோவில் கட்டுவதில் பிரச்சனை இருந்தது. அதனால் கமலேஷை திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர். அவர்களை விசாரித்தால் உண்மை வெளிவரும்.

யோகி ஆதித்யநாத்  முதல்வராவதற்கு முன், என் மகனின் பாதுகாப்புக்காக 17 போலீஸார் இருந்தனர். யோகி பதவியேற்ற பிறகு போலிஸாரின் எண்ணிக்கையை நான்காக குறைத்துவிட்டனர். அந்த நான்கு போலிசாரிடமும் எந்த துப்பாக்கியும் இல்லை. கொலை செய்யபடும்போது பாதுகாப்பு போலிஸார் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. கமலேஷ் கொலையில் திட்டமிட்டு சதிவேலை நடத்தப்பட்டுள்ளது.

என் மகன் இறந்ததிலிருந்து, போலிசார் எங்கள் குடும்பத்தை 12 மணி நேரம் அழக்கழித்தனர். என்னை காரில் வைத்து பூட்டுவிட்டு, மருமகளையும், பேரனையும் போலிஸார் அடித்தனர். யோகி ஆதித்யநாத் வந்தால் தான் கமலேஷ் உடலை எடுப்போம் என்று கூறினோம். ஆனால் யோகி அரசும், போலிஸாரும் எங்களது பேச்சை கேட்காமல் அவர்களின் இஷ்டத்திற்கு ஏற்றதுபோல நடந்துக்கொண்டனர்” இவ்வாறு கமலேஷின் தாயார் தெரிவித்தனர்.

கமலேஷ் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை, உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டி.ஜி.பி., ஓ.பி.சிங் மறுத்துள்ளார்.

இதையடுத்து, அக்டோபர் 20ஆம் தேதி கமலேஷுன் குடும்பத்தினரை நேரில் அழைத்துப் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “கொலையாளிகள் அனைவரும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.

கமலேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை, “அவர் உடலில் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. கழுத்தில் ஆழமான இரண்டு காயங்களும் இருக்கின்றன. பின்னந்தலையில் துப்பாக்கி புல்லட் பாய்ந்திருக்கிறது. அருகில் நின்று தலையில் சுட்டிருக்கிறார்கள். அவரை கொலைசெய்ய வேண்டும் என்பதைவிட கொடூர வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஆனால் பாஜக அரசு, கொலை செய்யப்பட்ட கமலேஷின் தாயார் கூறியதை முற்றிலுமாக மறுத்துவிட்டு, கொலையாளிகளை காக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி கைது செய்துவிட்டது.

Leave A Reply