கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது

0

வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை தனது வீட்டில் சேமித்து வைத்ததது எம். ஷிபு எனும் நபர் தான் என்று போலிஸ் அதுகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

சனிக்கிழமை அன்று கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடுவில் என்கிற ஊரில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளரான எம். ஷிபூவின் கலவையில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் எனக் கண்டறியப்பட்டது. இதில் ஷிபு மகன் உள்ளிட்ட இரண்டு குழந்தைகளும் இந்த வெடிப்பில் காயமடைந்தனர். விபத்தில் காயமடந்தவர்கள் 7 வயதான கோகுல் மற்றும் ஷிபுவின் உறவினர் மகன் 12 வயதான கஜின்ராஜ் ஆகும். மேலும், ஷிபு வீட்டில் பறவை கூண்டு கட்ட இருந்த இருவரும் குண்டுகள் அருகே நின்று கொண்டிருந்தனர், அப்போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கோகுல் மற்றும் காஜினிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தீவிரமாக எரிந்தனர். ஒருவருக்கு காலில் காயங்களும்,, மற்றொருவருக்கு இடுப்புக்கு கீழே காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகையால், வெடிக்கும் பொருள்கள் வைத்திருந்த காரணத்தால் சட்டப்பிரிவு 25(A), (1A), (1B) ஆயுத சட்ட பிரிவு 3 மற்றும் 5 இன் கீழ் ஷிபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஏற்கனவே சில கிரிமினல் வழக்குகள் ஷிபுக்கு எதிராக உள்ளன. முந்தய கிரிமினல் வழக்குகளுக்கு அவர் கைது செய்யப்படவில்லை என குடைமானமலா  போலிஸ் அதிகாரி கூறினார்.

சம்பவம் நடத்திற்கு வந்த போலீஸார்கள் வீட்டை சோதனையிட்டனர். இந்த சோதனையில் 3 கிலோ அலுமினியம் பவுடர், 600 கிராம் துப்பாக்கி பவுடர் உட்பட பல குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும் இந்த சோதனையில் ஷிபுவின் வீட்டிலிருந்து ஏழு வாள், கையில் கோடாரி மற்றும் ஒரு இரும்பு கம்பியை போலீசார் கண்டுபிடித்தனர். ஷிபுவின் வீட்டை ஆயுதம் சேமித்து வைத்திருந்த இடம் எனவும், இப்பகுதியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Comments are closed.