பாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி

0

பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகதான் வரும் என்று ஆர்.எஸ்.எஸ்-இன் செயலர் சுரேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய செயலர்களுக்கான மூன்று நாள் மாநாடு ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இதில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் செயலர் சுரேஷ் ஜோஷி  பேசியதாவது:

பாபர் மஸ்ஜித் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். இவ்வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகதான் வரும். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் உருவாகும் சூழ்நிலையை பொறுத்து, அடுத்து என்ன செய்வதென்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்யும்” என்றார்.

Comments are closed.