மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்!

1

நாட்டில் பல மாநிலங்களில் இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும், பா.ஜ.க ஆதரவாளருமான கல்யாண ராமன் என்பவன் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வைத்தது பெருமையானதாக இருந்து என்பது போல் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் கல்யாண ராமன் தெரிவித்துள்ளதாவது, “நேற்று அகமதாபாத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். ரோட்டில் போய்க்கொண்டு இருந்த ஒரு முஸ்லீமை அழைத்து ஜெய்ஸ்ரீராம் சொல்லு என்றவுடன் கூறினான். ஜெயமாதாதி என்று சொல் என பணித்தனர். ஒரு தயக்கம்கூட இல்லாமல் அழகா சொல்லிட்டு நகர்தான் அந்த ஆள். 2002 கோத்ரா. மோடிமேஜிக் கண்டு வியந்தேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நேற்று அகமதாபாத்தில் கண்ட நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆவல்” என்றும் பதிவிட்டுள்ளார் அவர்.

மத கலவரங்களை உண்டாக்கும் சதிவேலையைச் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Discussion1 Comment