கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலரான திருப்தி தேசாய் உள்ளிட்ட நான்கு பெண்கள் புனேவில் இருந்து கொச்சிக்கு வந்திறங்கி சபரிமலைக்கு செல்லக்கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
https://twitter.com/ANI/status/1199162570860449793
மனு அளித்துவிட்டு வெளியே வந்த நால்வரில் பிந்து என்ற பெண் மீது பாஜகவினர் மிளகாய்ப்பொடி தூவி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், “எங்களுக்கு பாதுகாப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அரசியலமைப்பு சட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்று சபரிமலைக்கு செல்வது உறுதி” என தெரிவித்துள்ளார்..