மன்னிப்பு கேட்க முடியாது: பிரக்யா சிங் தாக்கூர் தீவிரவாதிதான்- ராகுல் காந்தி

0

பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான், என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில்,  தீவிரவாதி பிரக்யா தாக்கூர் இன்னொரு தீவிரவாதி கோட்சேவை, தேச பக்தி உடையவர் என்று அழைக்கிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் வருத்தமான நாள், என்று டிவிட் செய்து இருந்தார்.

இது தொடர்பாக பிரக்யா தாக்கூர் பதில் அளித்துள்ளதாவது: நான் தீவிரவாதி கிடையாது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. என் புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரக்யா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் பாஜக எம்பிக்கள், ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினர்.

ராகுல் காந்தி அவரின் கருத்திற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் அமளியில் ஈடுப்பட்டனர்.

இதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளதாவது: நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். டிவிட்டரில் நான் சொன்னதுதான் இங்கும் சொல்கிறேன். பிரக்யா தீவிரவாதிதான். எனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து நான் மாற மாட்டேன் என்று குறிப்பிட்டார்.

செப்டம்பர் 29, 2008இல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது.  இதில் 7 பேர் பலியானார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வருபவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். இவர் தற்போது பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆகிவிட்டார்.

Comments are closed.