பாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்

0

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஜாமியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சஃபூரா ஜர்காரைக் ஏப்ரல் 10-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

நான்கு மாத கால கர்ப்பமாக இருந்த அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம், UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் சஃபூரா கர்கார், கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரந்தார்.

அப்போது டெல்லி காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‘கர்ப்பாக இருப்பது அவர் மீதான குற்றத்தை நீர்த்துப்போகச் செய்யாது. அவருக்கு சிறையில் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. தீவிரமான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் கர்ப்பமாக இருக்கும் சிறைக்கைதிகளுக்கு விலக்குகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. சிறையில் இருக்கும் காலத்தில் சட்டம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதிகளும் வழங்குகிறது. ஜர்கார் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தினமும் மருத்துவர்கள் சோதனை செய்துவருகின்றனர்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 23ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மாணவி சஃபூரா ஜர்கார், எந்தவித போராட்ட நடவடிக்கைளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Comments are closed.