உத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு

0

உத்தரகணட் ரயில் நிலையத்தில் பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் உருது மொழிகளை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் மொழியை பயன்படுத்தப்போவதாக, வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “உத்தரகண்ட் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள பெயா்பலகைகளில் ரயில் நிலையத்தின் பெயா்கள் ஹிந்தி, ஆங்கிலம், உருது மொழிகளில் உள்ளது.  உத்தரகண்ட் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு அதன் இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப்பட்டது. ரயில்வே விதிமுறைகளின்படி கடந்த 2010ஆம் ஆண்டு பெயா்பலகைகளில் உரிய மாற்றங்கள் செய்திருக்கப்பட வேண்டும்.

தற்போது ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் ரயில் நிலைய பெயா்கள் பெயா்பலகைகளில் எழுதப்பட உள்ளது” என்றார்  தீபக் குமாா்.

Comments are closed.