சிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா: அதிமுக-பாஜக-வின் நிலைப்பாடு என்ன?

0

பெங்களுர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சசிகலா, இன்று காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 20ஆம் தேதி ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சசிகலாவை பெங்களுர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது சசிகலாவுக்கு கொரோனா நீங்கிய நிலையில் சிறையில் இருந்து அவர் விடுதலையானாலும், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களுருவில் தான் இருக்கப்போவதாகவும், சில நாட்களுக்கு பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து வர குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் விடுதலையாகும் சசிகலாவை பார்க்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கசாமி பார்த்திபன், முருகன், உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். அத்துடன் சசிகலாவை காண அவரின் வழக்கறிஞர் பாண்டியனும் வந்துள்ளார்.

இந்த நிலையில் “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வராமலேயே இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவை பலப்படுத்தும் நோக்கில் பாஜக இறங்கியுள்ளது. அதன் பின்னணியிலேயே முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம் இறுதி செய்யும் என்று முரணான கருத்துகளை தமிழக பாஜகவினர் கூறிவந்த அதிமுகவே அதனை முடிவு செய்யும் என்று பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சசிகலா விடுதலைக்கு பிறகு தமிழக அரசியலில் மற்றம் ஏற்படும் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

Comments are closed.