சாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி

0

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்ஸும் எதிரான போலிஸாரின் அதிகார அடக்குமுறைக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படுகொலை விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனங்களும் போலிஸாரை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை – மகன் கொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சாத்தான்குளம் போலிஸாரிடம் உரிய விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்ய நெல்லை சிபிசிஐடி போலிஸுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலை வழக்கை எடுத்த சிபிசிஐடியினர் மாலையிலேயே சாத்தன்குளம் கொலையில் நேரடி தொடர்பில் இருந்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்  

இதனால் சாத்தான்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் தந்தை மகன் கொலைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தலைமைறைவாக இருந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.