பழங்குடியினர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் -ராகுல் காந்தி

0

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் கல்வி கற்கக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர் கல்வி உதவித் தொகையை மத்திய பாஜக அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ”இந்தியாவில் பழங்குடி மக்களும் பட்டியலினத்தவர்களும் கல்வி கற்கக்கூடாது என்பதே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் நோக்கமாக உள்ளது.

SC, ST, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.