CAA சட்டத்தை ஆதரித்து மோடிக்கு கடிதம் எழுத வேண்டும்: மாணவர்களை மிரட்டிய பள்ளி நிர்வாகம்

0

குஜராத் மாநிலம் அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் நரேந்திர மோடிக்கு  குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

ஒவ்வொரு மாணவர்களிடமும் அஞ்சல் அட்டையை கொடுத்த ஆசிரியர்கள்,  அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை அப்படியே மாணவர்கள் அனைவரும் அஞ்சல் அட்டையில்  எழுத வேண்டும் என்றும்  மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு எழுதாமல் அஞ்சல் அட்டை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நடைமுறை தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது என்று மாணவர்களை ஆசிரியர்கள் மிரட்டியுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினார்.

மேலும் “எழுதிய அஞ்சல் அட்டையில் மாணவர்களுடைய வீட்டு முகவரியை குறிப்பிடுவதன் நோக்கம் என்ன? அதுவும் எங்களது அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தால் எவ்வாறு அதை செய்ய முடிந்தது?” என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதை அடுத்து நிர்வாகம் மன்னிப்பு கோரியது. இதனால் அஞ்சல் அட்டைகளை பெற்றோர்களிடமே திருப்பியளித்தது பள்ளி நிர்வாகம்.

Leave A Reply