SDPI நடத்திய டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

0

SDPI நடத்திய டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

பாபரி பள்ளி வழக்கை விரைந்து முடித்திடு!சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக வழிபாட்டு அமைப்பை அகற்றிடு! வாக்குறுதியின்படி மீண்டும் பாபரி பள்ளியை அதே இடத்தில் கட்டிடு! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் டிசம்பர் 6 அன்று இந்தியா முழுவதும் ஆயிரத்திற்குமேற்பட்ட இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வீதிகளில் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் முகம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயீல் கலந்து கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

Comments are closed.