கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளரை தாக்கிய தீவிரவாதிகள் கைது

0

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் முகம்மது இக்பால் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளரான இக்பால், கோவை காட்டூர் பகுதியில் டயர் கடை நடத்தி வருகின்றார்.

செவ்வாய் அன்று மாலை டீ குடிப்பதற்காக அருகில் இருக்கும் பேக்கரிக்கு இக்பால் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் இக்பாலை இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் தாக்கினர். அப்போது அவருடன் இருந்த ஷாஜகான் என்பவர் தாக்குதலை தடுக்க முயன்றார். பின்னர் இருவரையும் தாக்கிவிட்டு பயங்கரவாதிகள் தப்பித்து ஓடிவிட்டனர். இதில் இக்பாலுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற ஷாஜகானுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இக்பாலை தாக்கிய சம்பவம் தொடர்பாக காட்டூர் பகுதி காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணையில் காட்டூரை சேர்ந்த சதீஷ் கண்ணன் மற்றும் ராகுல் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மதியழகன், விக்னேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.