இனப்படுகொலை குற்றவாளியை இலங்கை இராணுவ தளபதியாக்குவதா? எஸ்டிபிஐ கண்டனம்!

0

இலங்கையில் இனப்படுகொலை குற்றவாளியான சில்வாவை இராணுவ தளபதியாக நியமனத்தை இந்திய அரசும் கண்டிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஜ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கூறியிருப்பதாவது:

இலங்கையில் 2009ல் நடைபெற்ற இனப்படுகொலை மனித குல வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகும்.
கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாண்டனர். பல்லாயிம் பேர் காணாமல் போயினர். பல லட்சம் பேர் அகதிகள் ஆயினர்.

இந்த இனப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உலகத் தமிழர்கள் போராடி வருகின்றனர். உலகில் நடைபெற்ற பல இனப் படுகொலைகளின் காரணகர்த்தாக்கள் தண்டிக்கப்பட்டதை போன்று இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என கோரினர்.  இதன் விளைவு ஐ.நா மன்ற பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழு சுட்டிக் காட்டிய கொடூர செயல்களை அரங்கேற்றிய குற்றவாளிதான் சவேந்திர சில்வா.

இலங்கை இராணுவத்தின் 8-வது பட்டாலியனுக்கு தலைமை வகித்திருந்த சில்வா பெரும் வெறியாட்டத்தில் ஈடுபட்டு பெரும் படு கொலைகளுக்கு காரணமாக இருந்தார். மனித குலம் ஏற்காத பல அக்கிரமங்களை நிகழ்த்தியவன் என்ற குற்றச்சாட்டு இவன் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்ததைய கொடூரனை தான் மொத்த இலங்கை இராணுவத்தின் தளபதியாக
நியமித்துள்ளது இலங்கை அரசு. இது இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமின்றி, அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இலங்கை அரசின் இச்செயலை அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டித்துள்ளன. ஈவு இரக்கமற்ற முறையில் கொடூரங்களை செய்த சில்வாவின் நியமனத்தை
இந்திய அரசும் கண்டிக்க வேண்டும்.
இலங்கை அரசு உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்வதோடு, இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணக்கு, உரிய இடமளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.