பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு

0

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலகக்கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. அதில் பாபர் மசூதி தீர்ப்பு முக்கிய பிரச்சனையாக முன்னெடுத்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, எஸ்.டி.பி.ஐ கட்சி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வாய்ப்புகளைக் கண்டறிந்து, பாபர் மசூதிக்கான நீதியை உறுதிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும்.

பாபர் மசூதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை தகர்த்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்துகிறது.

பாபர் மசூதிக்கு நீதிகேட்டு வரும் டிசம்பர், 6 அன்று தேசம் தழுவிய அளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டங்கள், முற்றுகைகள், கருத்தரங்கங்கள், மனிதச்சங்கிலி போன்றவற்றை முன்னெடுக்கும். இவ்வாறு அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சன்னி வக்பு வாரியத்தின் கூட்டத்தில் கலந்துக்கொண்டபிறகு பேசிய பேசிய அதன் தலைவர் ஜுஃபர் ஃபரூக்கி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ள நிலையில் தற்போது எஸ்.டி.பி.ஐ கட்சி பறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது.

Comments are closed.