மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டி

0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியாக மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கியுள்ளார் டிடிவி. தினகரன். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தெஹ்லான் பாகவி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் அறிவித்துள்ளார்.

மத்திய சென்னை இஸ்லாமியர்கள் அதிகம் கொண்ட தொகுதி என்பதாலும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெறும் வகையில் வழக்கம்போல் திமுக அங்கு திமுக தயாநிதி மாறன்-ஐ வேட்பாளராக அறிவித்தது. அந்த அடிப்படையில் தயாநிதிக்கு எதிராக இஸ்லாமிய இயக்கமான எஸ்.டி.பி.ஐ. கட்சியை மத்திய சென்னையில் களமிறக்கி, திமுகவிக்கு எதிராக போட்டியிட வைக்கிறார் டிடிவி.

மேலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போதே தினகரனின் அமமுகவுக்கு துணையாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.