குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டாவது சுதந்திர போராட்டம்- மம்தா போர்க்கொடி!

0

மத்திய பாஜக அரசு இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளது.

மேலும் (என்.ஆர்.சி) தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்த மேற்கவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தற்போது குடியுரிமை சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், திகா நகரில் செய்தியாளா்களுக்கு (நேற்று) வெள்ளிக்கிழமை பேட்டியளித்த மம்தா பானா்ஜி, “குடியுரிமை சட்டத்தை எந்த சூழலிலும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். அதை அமல்படுத்தி மேற்கு வங்கத்தை மத்திய பாஜக அரசால் சீா்குலைத்துவிட முடியாது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை ஒருவா் கூட இந்த மாநிலத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடைபெறும். இதுவே இரண்டாவது சுதந்திர போராட்டமாக இருக்கும்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, கொல்கத்தாவில் வரும் 16ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெறும். மேலும், மத்திய அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடைபெறும்.

இந்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் அரசுத்தரப்பில் போராட்டங்கள் நடைபெறவுள்ளது.

Comments are closed.