மதத்தின் அடிப்படையில் வார்டுகள் பிரிப்பு – COVID-19 ன் குஜராத் மாடல்

0
குஜராத் மாநிலம் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் கொரானா தொற்று நோயாளிகளுக்கு 1200 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நோயாளிகளின் நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு தனி வார்டும், முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்களுக்கு தனி வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ  கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் எச் ரத்தோர் கூறியுள்ளார்.
கொரானா வைரஸினால்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த அன்றாட தகவல்களை டாக்டர் ரத்தோர் கூறியபொழுது ” பொதுவாக மருத்துவமனையில் ஆண்/ பெண் என்கிற பாலியல் ரீதியில்தான் வார்டுகள் அமைக்கப்படும். ஆனால் இங்கே மத ரீதியாக தனித்தனியாக உருவாக்கியுள்ளோம் ” என்றார். ஏன் இந்த பிரிவினை என பத்திரிகையாளர்கள் கேட்ட போது “இது அரசின் முடிவு நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
குஜராத் துணை முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரான நிதில் பட்டேலிடம் இது குறித்து கேட்டபோது இதுகுறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.

Comments are closed.