மோடிக்கு கடிதம் எழுத நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு!

0

மோடிக்கு கடிதம் எழுத நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் அதிகரித்துவிட்ட கும்பல் கொலைகள், மாட்டுக்கறி படுகொலை, ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பொதுமக்களை தாக்குவதை தடுத்து நிறுத்த கோரி மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

மோடிக்கு கடிதம் எழுதியதற்கு 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத வேண்டும் என இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு (SFI) விடுத்துள்ளது.

Comments are closed.