175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது

0

175 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் பிரதாப் சர்நாயக். இவர் தானேவின் ஓவலா-மஜிவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவரது உதவியாளர் அமித் சந்தோல். இவர்கள் மீது சட்டவிரோத நிதி கையாடல் தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று நடந்த சோதனையின்போது வெளிநாட்டு வங்கியிடமிருந்து பெற்ற டெபிட் கார்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளனர். ஃப்ரீமாண்ட் வங்கி சர்நாயக்கிற்கு வழங்கிய அட்டை வேறொருவரது முகவரியில் உள்ளது. மேலும், அவர் ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் சர்நாயக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஆஃப்-ஷோர் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் புத்தக ஆவணங்களையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் சரநாயக்கின் உதவியாளர் அமித் சந்தோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.