அதிகாரத்திற்கு சிவசேனா: மண்டியிடுமா பாஜக…?

0

பாஜக-சிவசேனை கூட்டணி மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்பே பதவி பங்கீடு தொடர்பாக முடிவு செய்து விட்டதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரித்திருந்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றும், முதல்வா் பதவி வேண்டுமென்று சிவசேனா வலியுறுத்துவதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், சிவசேனா நினைத்தால் ஆட்சியமைக்க தேவையான ஆதரவைப் பெற முடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனா ஆட்சியமைக்க முடிவெடுத்தால் அதற்கு தேவையான ஆதரவை எளிதாகப் பெற முடியும். இங்கு சமபங்கு ஆட்சியமைக்க மட்டும் தான் சிவசேனா, பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். சிவசேனா கட்சியிலிருந்து தான் மகாராஷ்டிர முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

Comments are closed.