மும்பையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. வீரசாவர்க்கர் கடந்த காலத்தின் மறக்கப்பட்ட எதிரொலிகள் என்ற தலைப்பிலான அந்த புத்தகத்தை சம்பத் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜவஹர்லால் நேரு துணிச்சல் மிக்கவர், வீரர் என்று அழைத்திருக்கிறேன். நேரு 14 நிமிடங்கள் சிறையில் இருந்திருந்திருந்தால், வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
வீரசாவர்க்கர் மட்டும் இந்தியவின் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒருநாடே இருந்திருக்காது. இந்த புத்தகத்தை ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளில் இருக்கும் நூலகங்களில் வாங்கி வைத்து மாணவர்கள் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு எம்.பி.யும், எம்எல்ஏவும் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்து மகாசபையை உருவாக்கியவரே இந்த “வினாயக் தாமோதர் சாவர்க்கர்”. இந்துக்கள் அனைவரும் வணங்க “பதித பவன்” என்ற கோவிலை ரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று இவர் ஏற்படுத்தினார். பின்னர் 1966 பிப்ரவரி 26இல் இறந்தார். மேலும் இவரது ஊர்வலத்தில் 2000க்கு மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்-யினர் கலந்துக்கொண்டனர்.