சிவசேனா தலைவர் பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் உறுப்பினர் வீடு சூறை!

0

சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரேவ பற்றி கருத்துகளைத் தெரிவித்தவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ வெறியர்கள்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஹா்ஷவா்தன் ஜாதவ். இவா் கன்னட் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசேனை கட்சி சாா்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தாா். பின்னா் அக்கட்சியிலிருந்து விலகினாா்.

இந்த நிலையில் 21ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவை தோ்தலில் கன்னட் தொகுதியில் அவா் சுயட்சையாகப் போட்டியிடுகிறாா்.

இதற்காக புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட ஹா்ஷவா்தன் ஜாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பற்றிய சில கருத்துகளை பேசியுள்ளார்.

இதனையடுத்து இந்துத்துவ வெறியர்கள், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஜாதவ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினா். இதில் அவரது சேதமடைந்தது.

இத்தாக்குதல் நடைபெற்றபோது ஹா்ஷவா்தன் ஜாதவ் வீட்டில் இல்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed.